அருளும் பொருளும் இராமானுஜரின் இரு கண்கள் | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 41
அறிவில்லாப் பொருள்களைச் சடப்பொருள் என்கிறோம். அறிவுள்ள பொருள்களை உயிர்ப்பொருள் என்கிறோம். புல், பூண்டு, பூச்சி, பறவை, மிருகம் இவற்றோடு ஒப்பிடும் போது மனிதனுக்கு அறிவு கூட.

அறிவில்லாப் பொருள்களைச் சடப்பொருள் என்கிறோம். அறிவுள்ள பொருள்களை உயிர்ப்பொருள் என்கிறோம். புல், பூண்டு, பூச்சி, பறவை, மிருகம் இவற்றோடு ஒப்பிடும் போது மனிதனுக்கு அறிவு கூட. ஆனால், ஆறறிவு இருப்பதனால் மட்டுமே மனிதன் என்னும் உயிர்ப்பொருளை உயிர்ப்பொருள் என்று சொல்லிவிடலாகாது என்கிறார் திருவரங்கத்தமுதனார். ஆண்டவனை அறிந்து கொள்ள முற்படும் வரை உயிர்ப்பொருள் கூட உயிரில்லாத பொருள் தான் என்பது அவரது கூற்று. ஆனால், இராமானுஜரை சந்திக்கும் வரை தான் அவருக்கு அந்தத் துயரம் இருந்தது.
என்னைப் புவியில் ஒரு பொருளாக்கி மருள் சுரந்த
முன்னைப் பழவினை வேரறுத்து ஊழி முதல்வனையே
பன்னப் பணித்த இராமானுசன் பரன் பாதமும் என்
சென்னித் தரிக்க வைத்தான் எனக்கேதும் சிதைவில்லையே.
What's Your Reaction?