வாரம்.. மாதம்.. வருடக் கடைசி என்பதால் திருமலையில் அலைமோதும் பக்தர்களின் கூட்டம்

வாரம், மாதம், வருடக் கடைசி என்பதால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகின்றது.

Dec 28, 2024 - 09:50
 0  4
வாரம்.. மாதம்.. வருடக் கடைசி என்பதால் திருமலையில் அலைமோதும் பக்தர்களின் கூட்டம்

திருமலை: வாரம், மாதம், வருடக் கடைசி என்பதால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகின்றது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழக்கமாக ஆண்டு முழுவதும் பக்தர்களின் கூட்டம் சுவாமி தரிசனத்திற்காக அலைமோதுவது வழக்கம். ஆனால் தற்போது வாரம், மாதம், வருடக்கடைசி என்பதால் வழக்கத்துக்கும் அதிகமாகவே பக்தர்கள் திருமலையில் கூடி வருகின்றனர்.

இதனால் திருமலையில் எங்கு பார்த்தாலும் பக்தர்களின் கூட்டமாகவே காணப்படுகிறது. ஏழுமலையானை தினமும் சராசரியாக தற்போது 70 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இனி வரும் நாட்களில் டிசம்பர் 30, 31 மற்றும் ஆங்கில புத்தாண்டான ஜனவரி 1 ஆகிய தேதிகளில் மேலும் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow