மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்: ரூ.500, ரூ.200 கட்டணச் சீட்டுகளுக்கு ஆன்லைன் முன்பதிவு வசதி

மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தில் பங்கேற்க விரும்பும் உள்ளூர், வெளியூர் பக்தர்கள் ரூ.500, ரூ.200 கட்டணச் சீட்டுகளை ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம் என கோயில் இணை ஆணையர் ச.கிருஷ்ணன் கூறியுள்ளார்.

Apr 15, 2025 - 18:20
 0  17
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்: ரூ.500, ரூ.200 கட்டணச் சீட்டுகளுக்கு ஆன்லைன் முன்பதிவு வசதி

மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தில் பங்கேற்க விரும்பும் உள்ளூர், வெளியூர் பக்தர்கள் ரூ.500, ரூ.200 கட்டணச் சீட்டுகளை ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம் என கோயில் இணை ஆணையர் ச.கிருஷ்ணன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று (ஏப்.15) வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் சித்திரை திருவிழா ஏப். 28-ம் தேதி வாஸ்து சாந்தியுடன் தொடங்கி மே 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் முக்கிய விழாவான திருக்கல்யாணம் மே 8-ம் தேதி கோயிலின் வடக்காடி வீதியிலுள்ள திருக்கல்யாண மண்டபத்தில் காலை 8.35 மணிக்குமேல் 8.59 மணிக்குள் நடைபெறவுள்ளது. உள்ளூர், வெளியூர், வெளிநாட்டு பக்தர்கள் பக்தர்களின் வசதிக்காக இந்து சமய அறநிலையத்துறை இணையதளமான https://hrce.tn.gov.in- மற்றும் கோயிலின் இணையதளமான https://maduraimeenakshi.hrce.tn.gov.in -ல் ஏப்.29 முதல் மே 2-ம் தேதி இரவு 9 மணிவரை ரூ.500, ரூ.200 கட்டணச்சீட்டு முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow