மதுரை சித்திரை திருவிழாவில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது.

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இன்று காலை தேரோட்டம் நடைபெறுகிறது.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் சித்திரைத் திருவிழா ஏப்.29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினமும் காலை, மாலை சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளினர். 8-ம் நாள் நிகழ்ச்சியாக செவ்வாய்க்கிழமை இரவு மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகமும், 9-ம் நாளான புதன்கிழமை மீனாட்சி அம்மனுக்கு திக்கு விஜயமும் நடைபெற்றது.
What's Your Reaction?