ருத்ரபிரயாக் கார்த்திக் சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரிப்பு

உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள ருத்ரபிரயாக் கார்த்திக் சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை கடந்த மூன்று ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரித்துள்ளது என்று அம்மாநில அரசின் சுற்றுலா துறை கூடுதல் செயலாளர் ரவி சங்கர் தெரிவித்துள்ளார்.

May 22, 2025 - 06:50
 0  3
ருத்ரபிரயாக் கார்த்திக் சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரிப்பு

ருத்ரபிரயாக்: உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள ருத்ரபிரயாக் கார்த்திக் சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை கடந்த மூன்று ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரித்துள்ளது என்று அம்மாநில அரசின் சுற்றுலா துறை கூடுதல் செயலாளர் ரவி சங்கர் தெரிவித்துள்ளார்.

தேவ பூமியாக உத்தராகண்ட் மாநிலம் போற்றப்படுகிறது. பஞ்ச பிரயாகையில் (நந்தப் பிரயாகை, தேவப் பிரயாகை, ருத்ர பிரயாகை, கர்ணப் பிரயாகை, விஷ்ணுப் பிரயாகை) ஒன்றான ருத்ரப் பிரயாகையில் அலக்நந்தா நதியும் மந்தாகினி நதியும் சங்கமமாகின்றன. ருத்ரப் பிரயாகையில் கடல் மட்டத்தில் இருந்து 3,050 மீட்டர் உயரத்தில் கார்த்திக் சுவாமி கோயில் அமைந்துள்ளது. சிலிர்க்க வைக்கும் சீதோஷ்ண நிலை, கரடு முரடான பாதை, வழி நெடுகிலும் மரங்கள், கொஞ்சம் அசந்தாலும் வழுக்கி விடும் பாறைகள் என்ற நிலையைக் கடந்து முருகப் பெருமானை தரிசிக்க வேண்டும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow