வர்ணம்பூசி, கிரீடம் தாங்கிய ஐயப்ப பக்தர்களின் ஆடல் பாடலால் களைகட்டிய எருமேலி

எருமேலியில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் தங்கள் உடலில் பல வர்ண பொடிகளைப் பூசி, கிரீடம் அணிந்து பேட்டைத்துள்ளல் வழிபாட்டில் ஆடிப்பாடி வருகின்றனர்.

Dec 6, 2024 - 16:55
 0  4
வர்ணம்பூசி, கிரீடம் தாங்கிய ஐயப்ப பக்தர்களின் ஆடல் பாடலால் களைகட்டிய எருமேலி

தேனி: எருமேலியில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் தங்கள் உடலில் பல வர்ண பொடிகளைப் பூசி, கிரீடம் அணிந்து பேட்டைத்துள்ளல் வழிபாட்டில் ஆடிப்பாடி வருகின்றனர். இதனால் இத்தலம் இசை முழக்கங்களாலும், சரணகோஷங்களாலும் களைகட்டி வருகிறது.

சபரிமலைக்குச் செல்லும் வழியில் கோட்டயம் மாவட்டத்தில் எருமேலி அமைந்துள்ளது. இங்குள்ள மணிமாலா ஆற்றின் கரையில் வேட்டைக் கோலத்தினாலான ஐயப்பன் கோயில் அமைந்துள்ளது. அழுதா நதியில் நீராடி கல் எடுத்துச் சென்று கல்லிடும் குன்றில் அந்த கற்களை வீசுவது, பம்பையில் நீராடி சந்நிதானம்செல்வது போன்ற வழிபாடுகளைப் போன்று இங்கு நடைபெறும் பேட்டை துள்ளல் நிகழ்ச்சியும் மிகவும் பிரசித்தி பெற்றது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow