IND vs AUS 2வது டெஸ்ட்: மிட்செல் ஸ்டார்க் வேகத்தில் சரணடைந்த இந்தியாவின் டாப் ஆர்டர்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 180 ரன்களைச் சேர்த்தது. இதில் ஆஸ்திரேலிய பவுலர் மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 

Dec 6, 2024 - 15:55
 0  5
IND vs AUS 2வது டெஸ்ட்: மிட்செல் ஸ்டார்க் வேகத்தில் சரணடைந்த இந்தியாவின் டாப் ஆர்டர்

அடிலெய்டு: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 180 ரன்களைச் சேர்த்தது. இதில் ஆஸ்திரேலிய பவுலர் மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டிராபி டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பெர்த் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பேட்டிங்கில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி ஆகியோர் சதம் அடித்து அசத்திய நிலையில் பந்து வீச்சில் ஜஸ்பிரீத் பும்ரா 8 விக்கெட்களை வீழ்த்தி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்திருந்தார். அவருக்கு உறுதுணையாக முகமது சிராஜ், ஹர்ஷித் ராணா செயல்பட்டிருந்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow