தடம் புரள மறுப்பவனின் ஓட்டம்! | இயக்குநரின் குரல்
தமிழ் வாழ்க்கையை மட்டும் பிடிவாதமாகப் படம்பிடிக்கும் இயக்குநர்களில் ஒருவர், இந்தியில் தாப்சி நடிப்பில் கடந்த 2021 வெளியாகி வெற்றிபெற்ற ‘ரேஷ்மி ராக்கெட்’ படத்தின் கதாசிரியர் நந்தா பெரியசாமி.

தமிழ் வாழ்க்கையை மட்டும் பிடிவாதமாகப் படம்பிடிக்கும் இயக்குநர்களில் ஒருவர், இந்தியில் தாப்சி நடிப்பில் கடந்த 2021 வெளியாகி வெற்றிபெற்ற ‘ரேஷ்மி ராக்கெட்’ படத்தின் கதாசிரியர் நந்தா பெரியசாமி. அவரது எழுத்து இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘திரு.மாணிக்கம்’ வரும் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் நிலையில் அவருடன் உரையாடியதி லிருந்து ஒரு பகுதி:
கதாபாத்திரத்தின் பெயரைத் தலைப்பாகச் சூட்டும்போது ‘திரு’, ‘திருமதி’ என்பதை முன்னொட்டாகப் பயன்படுத்த மாட்டார்கள். இந்தத் ‘திரு’வுக்குக் கதையில் பொருள் இருக்கிறதா? - தன்னுடைய குடும்பத் தைக் காப்பாற்றுவதற்கு ஒருவன் எந்த எல்லைக் கும் போவான் என்று பல படங்களில் பார்த்திருக்கி றோம். எடுத்துக்காட்டாக ‘பாபநாசம்’ படத்தைக் கூறலாம். ஆனால், இந்தக் கதையின் நாயகன், எந்தச் சூழ்நிலையிலும் தனது நேர்மையை இழக்க விரும்பாதவன்.
What's Your Reaction?