வெள்ளைப் புலிகளின் காட்ஃபாதர்! | வரலாறு முக்கியம் மக்களே! - 20
அதன் குட்டிகளும் தப்பவில்லை. ஆனால், ஒரே ஒரு குட்டியை மட்டும் அவர் சுடவில்லை. தன் பணியாளர்களிடம் அந்தப் புலிக்குட்டியைப் பிடித்து வரச் சொன்னார். அதன் பட்டுடலைத் தடவிப் பார்த்தார்.

1951. பந்தாவ்கர் காட்டுப்பகுதியில் அந்த மகாராஜா தன் துப்பாக்கியால் ஒரு தாய்ப்புலியைக் குறிபார்த்தார். தோட்டா தப்பவில்லை. அதன் குட்டிகளும் தப்பவில்லை. ஆனால், ஒரே ஒரு குட்டியை மட்டும் அவர் சுடவில்லை. தன் பணியாளர்களிடம் அந்தப் புலிக்குட்டியைப் பிடித்து வரச் சொன்னார். அதன் பட்டுடலைத் தடவிப் பார்த்தார்.
உடல் முழுக்க வெள்ளையும் கொஞ்சமாக இளங்காவியும் கலந்த நிறத்தில் இருந்தது. குட்டியின் ஊதா நிறக் கண்களில் பயம் தெரிந்தது. ‘இதை அரண்மனைக்குக் கொண்டு வாருங்கள்’ என்று மகாராஜா கட்டளை இட்டார். அந்த மகாராஜா தன் வாழ்க்கையில் செய்த நல்ல காரியங்களில் இதுவும் ஒன்று. வெள்ளைப் புலிகள் விஷயத்தில் அவர் எடுத்தது வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு.
What's Your Reaction?