வரலாறு முக்கியம் மாணவர்களே!

அரசாட்சிப் பற்றிப் படிக்கும்போது ஒவ்வொரு வம்சத்திலும் அதைத் தோற்றுவித்தவர், கடைசி மன்னர், முக்கிய மன்னர்கள், ஆட்சியில் சிறப்புப் பெற்றவர்கள், அறிஞர் பெரு மக்கள், நூலாசிரியர்கள் எனத் தனித்தனியே குறித்துவைத்துப் படிப்பது சிறந்தது. 

Feb 19, 2025 - 12:50
 0  4
வரலாறு முக்கியம் மாணவர்களே!

போட்டித் தேர்வுகளில் வரலாறு பாடத்தைப் படித்து நினைவில் வைத்துக்கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கின்றன. இந்திய வரலாற்றைப் பொறுத்தவரை பண்டைய வரலாற்றில் கற்காலம், சிந்துசமவெளி நாகரிகம் தொடங்கி அரேபியர் காலம் வரையும், இடைக்கால வரலாற்றில் சுல்தான்கள் ஆட்சி முதல் மொகலாயர் ஆட்சிக் காலம் வரையும், அடுத்து பிரிட்டிஷ் இந்தியா, அதற்கடுத்துச் சுதந்திரத்திற்குப் பிறகான இந்தியா எனவும் பாடங்களைப் பிரித்துப் படிப்பது நல்லது.

இந்திய வரலாறு: பொதுவாக ஒரு நாகரிகத்தைப் பற்றிப் படிக்கும் போது நாகரிகம் தோன்றிய இடம், முக்கிய நகரங்கள், வாழ்க்கை முறை, தொழில், கலை, பொழுதுபோக்கு, எழுத்து முறை, வியாபாரம், நாணயம், அயல்நாட்டுத் தொடர்பு போன்றவற்றைப் பற்றி நன்கு அறிவது அவசியம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow