லெபனான் மீதான தாக்குதலில் ஹிஸ்புல்லா தளபதி மரணம்: இஸ்ரேல் ராணுவம் தகவல்
தெற்கு லெபனான் மீதான தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதி கொல்லப்பட்டார் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது

டெல் அவிவ்: தெற்கு லெபனான் மீதான தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதி கொல்லப்பட்டார் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலின் தெற்கு பகுதியில் பாலஸ்தீனத்தின் காசா பகுதியைச் சேர்ந்த தீவிரவாத குழுவான ஹமாஸ் திடீர் தாக்குதல் நடத்தியது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதையடுத்து, காசா பகுதி மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர்.
What's Your Reaction?