“அமெரிக்காவின் வாக்குறுதிக்காக ஜனநாயக கட்சிக்கு வாக்களியுங்கள்” - கமலா ஹாரிஸ்

அமெரிக்காவின் வாக்குறுதிக்காக ஜனநாயகக் கட்சிக்கு வாக்களியுங்கள் என அக்கட்சியின் அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Nov 11, 2024 - 15:45
 0  4
“அமெரிக்காவின் வாக்குறுதிக்காக ஜனநாயக கட்சிக்கு வாக்களியுங்கள்” - கமலா ஹாரிஸ்

வாஷிங்டன்: “அமெரிக்காவின் வாக்குறுதிக்காக ஜனநாயகக் கட்சிக்கு வாக்களியுங்கள்” என அக்கட்சியின் அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை அவர் எக்ஸ் சமூகவலைதளத்தில் ‘நாளை’ (Tomorrow) என்ற தலைப்பில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவரது குரல் பின்னணியில் ஒலிக்கிறது. “அமெரிக்காவின் வாக்குறுதியின் மீது நமக்கு நம்பிக்கை இருக்கிறது அல்லவா?. அதற்காக போராடத் தயாராக இருக்கிறோம் அல்லவா?. அப்படியென்றால் பின்னோக்கிப் பார்க்காமல் முன்னேறுவோம்.” என்று கமலா கூறுகிறார். இறுதியில் நவம்பர் 5-ம் தேதி வாக்களியுங்கள் என்ற வாசகத்தோடு அந்த வீடியோ நிறைவு பெறுகிறது. தேர்தலை ஒட்டி அவர் பதிவிட்ட அண்மைய பதிவு இதுவாகவே இருக்கின்றது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow