நிபந்தனையற்ற போர்நிறுத்தம்: ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா, சீனாவின் தீர்மானம் நிறைவேறுமா?

ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தில் இஸ்ரேல் - ஈரான் இடையே உடனடி மற்றும் நிபந்தனையற்ற போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் தீர்மானத்தை ரஷ்யா, சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் முன்மொழிந்தன. இதன் மீதான வாக்களிப்பு எப்போது நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Jun 23, 2025 - 17:05
 0  3
நிபந்தனையற்ற போர்நிறுத்தம்: ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா, சீனாவின் தீர்மானம் நிறைவேறுமா?

தெஹ்ரான்: ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தில் இஸ்ரேல் - ஈரான் இடையே உடனடி மற்றும் நிபந்தனையற்ற போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் தீர்மானத்தை ரஷ்யா, சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் முன்மொழிந்தன. இதன் மீதான வாக்களிப்பு எப்போது நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்கள் குறித்து விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நியூயார்க்கில் நேற்று கூடியது. 15 உறுப்பினர்களைக் கொண்ட இந்த அமைப்பின் கூட்டத்தில் உடனடி மற்றும் நிபந்தனையற்ற போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் தீர்மானத்தை ரஷ்யா, சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் முன்மொழிந்தன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow