சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுவதற்கு எதிர்ப்பு: அமெரிக்காவில் கலவரம் பரவுவதால் பதற்றம்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். ட்ரம்ப் அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து லாஸ் ஏஞ்சலஸ் மற்றும் சான்பிரான்சிஸ்கோவில் பெரும் கலவரம் வெடித்துள்ளது.

Jun 10, 2025 - 06:30
 0  4
சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுவதற்கு எதிர்ப்பு: அமெரிக்காவில் கலவரம் பரவுவதால் பதற்றம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். ட்ரம்ப் அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து லாஸ் ஏஞ்சலஸ் மற்றும் சான்பிரான்சிஸ்கோவில் பெரும் கலவரம் வெடித்துள்ளது. நூற்றுக்கணக்கான வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. வர்த்தக நிறுவனங்கள், கடைகள் சூறையாடப்பட்டன.

அமெரிக்காவில் சுமார் 1.20 கோடி பேர் சட்டவிரோதமாக குடியேறியுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில் அதிக பட்சமாக மெக்ஸிகோவை சேர்ந்த 40 லட்சம் பேர் அங்கு சட்டவிரோதமாக தங்கி உள்ளனர். இந்தியாவை சேர்ந்த 7.25 லட்சம் பேர் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow