சீனாவுக்கு 125%, பல நாடுகளுக்கு வரிவிதிப்பு 90 நாள் நிறுத்தம் - ட்ரம்ப் ‘நகர்வு’ பின்னணி என்ன?

உலக நாடுகளின் பொருட்கள் மீதான பரஸ்பர வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்தார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். ஆனால் இது சீனாவுக்குப் பொருந்தாது என்று கெடுபிடி காட்டியுள்ளார்.

Apr 10, 2025 - 09:55
 0  4
சீனாவுக்கு 125%, பல நாடுகளுக்கு வரிவிதிப்பு 90 நாள் நிறுத்தம் - ட்ரம்ப் ‘நகர்வு’ பின்னணி என்ன?

வாஷிங்டன்: உலக நாடுகளின் பொருட்கள் மீதான பரஸ்பர வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்தார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். ஆனால் இது சீனாவுக்குப் பொருந்தாது என்று கெடுபிடி காட்டியுள்ளார்.

பரஸ்பர வரி பட்டியலை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த 2-ம் தேதி வெளியிட்டார். இதில் சீன பொருட்களுக்கான வரி 34% ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதற்கு பதிலடியாக அமெரிக்காவின் அனைத்து பொருட்களுக்கும் 34% வரி விதிக்கப்படும் என சீனா அறிவித்தது. இதற்குப் பதிலடியாக அமெரிக்கா சீனாவின் கூடுதல் வரி விதிப்புக்கு அபராதமாக 50% வரியை விதித்தது. இதனால் சீனப் பொருட்களின் மீதான வரி 104% ஆனது. இந்நிலையில் இவ்விரு நாடுகளுக்கிடையிலான வரி யுத்தம் தீவிரமடைய அமெரிக்க பொருட்களுக்கான வரி இன்று (ஏப்.10) முதல் 84% ஆக உயர்த்தப்படும் என சீன நிதியமைச்சகம் நேற்று அறிவித்தது. இந்தச் சூழலில் தான் உலக நாடுகளின் பொருட்கள் மீதான பரஸ்பர வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்தார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். ஆனால் இது சீனாவுக்குப் பொருந்தாது என்று அறிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow