ரைட் சகோதரர்கள் | விஞ்ஞானிகள் - 13
வட கரோலினாவில் உள்ள டெவில் மலையில் 1903 டிசம்பர் 14 இல் விமானம் பறக்கத் தயாரானது. சகோதரர்களில் யார் செலுத்துவது என்று நாணயம் சுண்டிப் பார்த்ததில், வில்பர் வென்றார். அமர முடியாது. குப்புறப் படுத்துக்கொண்டு கை, கால்களால் விமானத்தைச் செலுத்த வேண்டும். விமானம் துளியும் நகரவில்லை. அவர்கள் அப்போதும் மனம் தளரவில்லை. அடுத்த மூன்று நாள்களில் மேலும் சில மாற்றங்களைச் செய்தனர். டிசம்பர் 17இல் விமானம் மீண்டும் தயாரானது. ஆர்வில் படுத்துக்கொண்டு விசையை இழுத்தார். விமானம் ஆடி ஆடி, புகை விட்டுக்கொண்டு மெதுவாக மேலே எழுந்தது. 12 நொடிகள் பறந்தது! 120 அடி தூரத்துக்கு அப

பறவையைப் பார்த்துப் பறக்க ஆசைப்பட்டனர். கண்ட கனவுக்காகப் பல ஆண்டுகள் உழைத்தனர். சோதனை என்கிற பெயரில் பயமின்றித் தங்கள் உயிரைப் பணயம் வைத்தனர். இறுதியில் தங்கள் கனவை நிஜமாக்கினர். அவர்கள்தான் விமான உருவாக்குதலில் வெற்றி பெற்ற ரைட் சகோதரர்கள்.
வில்பர் ரைட் (1867 ஏப்ரல் 16), ஆர்வில் ரைட் (1871 ஆகஸ்ட் 19) அமெரிக்காவில் பிறந்தனர். தந்தை மில்டன் ரைட் தேவாலயத்தின் பாதிரியார். இதனால் குடும்பம் அடிக்கடி இடம்பெயர்ந்தது. ஓரடி நீளம் கொண்ட பறக்கும் ஹெலிகாப்டர் பொம்மை ஒன்றை தந்தை வாங்கிக் கொடுத்தார். அந்தப் பொம்மை மீது வில்பருக்கும் ஆர்விலுக்கும் ஆர்வம் அதிகம் இருந்தது. அந்தப் பொம்மையைப் போல் பெரிய அளவில் ஒரு வாகனத்தை உருவாக்கி, பறக்க வைக்க வேண்டும் என்று நினைத்தனர். மரம், கம்பி, உலோகக் குழாய்களை வைத்து அந்த வயதிலேயே முயன்று பார்த்தனர்.
What's Your Reaction?