IND vs AUS டெஸ்ட் 3-வது நாள்: தடுமாறும் இந்திய அணி 51/4
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸின் மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 51 ரன்களைச் சேர்த்துள்ளது.

பிரிஸ்பன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸின் மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 51 ரன்களைச் சேர்த்துள்ளது. மழை குறுக்கிட்டதால் முன்கூட்டிய மூன்றாவது நாள் ஆட்டம் முடித்து வைக்கப்பட்டது.
இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் 2-வது போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது. இதையடுத்து தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
What's Your Reaction?