ரூ.90 ஆயிரத்தை நெருங்கியது தங்கம் விலை: நகை வியாபாரிகள் சொல்வது என்ன?

சென்​னை​யில் ஆபரணத் தங்​கத்​தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.600 உயர்ந்​து, ரூ.89,600-க்கு விற்​பனை செய்​யப்​பட்​டது. ஓரிரு நாளில் ரூ.90 ஆயிரத்தை தொடும் என்று நகை வியா​பாரி​கள் தெரி​வித்​தனர்.

Oct 8, 2025 - 01:20
 0  3

சர்​வ​தேச பொருளா​தார நில​வரத்​துக்கு ஏற்ப தங்​கம் விலை​யில் ஏற்​ற​மும் இறக்​க​மும் இருந்து வரு​கிறது. இதன் அடிப்​படை​யில், செப்​.6-ம் தேதி ரூ.80,040 ஆக இருந்த ஒரு பவுன் ஆபரணத் தங்​கம் செப்​.23-ம் தேதி ரூ.85,120 ஆக உயர்ந்​தது. எச்​1பி விசா கட்​ட​ணத்தை அமெரிக்க அரசு உயர்த்​தி​யது. அமெரிக்க டாலருக்கு நிக​ரான இந்​திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ஆகியவை தங்​கம் விலை உயர்​வுக்கு முக்​கியக் காரண​மாக அமைந்​தது. இதன்​பிறகு, ஓரிரு நாட்​கள் இறக்​க​மாக​வும், பெரும்​பாலான நாட்​கள் ஏற்​ற​மாக​வும் இருந்து வந்த நிலை​யில், நேற்று முன்​தினம் பவுன் தங்​கம் ரூ.89 ஆயிரத்தை தொட்​டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow