இஸ்ரேல் - ஹமாஸ் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்: 20 அம்ச திட்டத்தை முன்மொழிந்துள்ளார் ட்ரம்ப்

இஸ்​ரேல் அரசு, ஹமாஸ் குழு​வினர் இடையே எகிப்​தில் அமை​திப் பேச்​சு​வார்த்தை நடை​பெறுகிறது. இந்த பேச்​சு​வார்த்​தை​யில் முன்​னேற்​றம் ஏற்​பட்​டிருப்​பதாக தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன.

Oct 8, 2025 - 02:20
 0  3
இஸ்ரேல் - ஹமாஸ் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்: 20 அம்ச திட்டத்தை முன்மொழிந்துள்ளார் ட்ரம்ப்

கெய்ரோ: இஸ்​ரேல் அரசு, ஹமாஸ் குழு​வினர் இடையே எகிப்​தில் அமை​திப் பேச்​சு​வார்த்தை நடை​பெறுகிறது. இந்த பேச்​சு​வார்த்​தை​யில் முன்​னேற்​றம் ஏற்​பட்​டிருப்​பதாக தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன.

இஸ்​ரேல் ராணுவம் மற்​றும் காசா​வின் ஹமாஸ் குழு​வினர் இடையே கடந்த 2 ஆண்​டு​களாக போர் நீடித்து வரு​கிறது. இந்த போருக்கு முற்​றுப்​புள்ளி வைக்க அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 20 அம்ச திட்​டத்தை முன்​மொழிந்​துள்​ளார். போரி​னால் பாதிக்​கப்​பட்​டுள்ளகாசா மீண்​டும் கட்டி எழுப்​பப்​படும். அந்த பகு​தி​யில் இருந்து தீவிர​வாதம் அகற்​றப்​படும். ஹமாஸ் குழு​வின் பிடி​யில் உள்ள இஸ்​ரேல் பிணைக் கைதி​கள் உடனடி​யாக விடு​தலை செய்​யப்பட வேண்​டும். உயி​ரிழந்​தவர்​களின் உடல்​களை ஒப்​படைக்க வேண்​டும். போர் நிறுத்​தம் அமல் செய்​யப்​பட்ட பிறகு காசா​வில் இருந்து இஸ்​ரேல் ராணுவம் படிப்​படி​யாக வெளி​யேறும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow