ராமேசுவரம் கோயிலில் சிருங்கேரி சுவாமிகள் தரிசனம்

சிருங்கேரி சாரதா பீடத்தின் ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ விதுசேகர பாரதி சன்னிதானம் சுவாமிகள் ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் நேற்று சிறப்பு பூஜைகள் செய்து, சுவாமி தரிசனம் செய்தார்.

Jul 7, 2025 - 18:25
 0  3
ராமேசுவரம் கோயிலில் சிருங்கேரி சுவாமிகள் தரிசனம்

ராமேசுவரம்: சிருங்கேரி சாரதா பீடத்தின் ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ விதுசேகர பாரதி சன்னிதானம் சுவாமிகள் ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் நேற்று சிறப்பு பூஜைகள் செய்து, சுவாமி தரிசனம் செய்தார்.

தூளி பாத பூஜை: தமிழகத்தில் விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி சாரதா பீடம் ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ விதுசேகர பாரதி சன்னிதானம் சுவாமிகள் நேற்று முன்தினம் மாலை ராமேசுவரம் வந்தார். ராமேசுவரம் சிருங்கேரி மடத்தில் தூளி பாத பூஜை செய்த சிருங்கேரி சுவாமிகள், இரவு ராமநாத சுவாமி கோயில் 3-ம் பிரகாரத்தில் ஸ்ரீ சாரதா சந்திர மவுலீஸ்வர பூஜையை நடத்தினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow