திருச்செந்தூரில் இன்று மகா கும்பாபிஷேக விழா: தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்

திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயி​ல் மகா கும்​பாபிஷேகம் இன்று (7-ம் தேதி) நடை​பெறுகிறது. இதையொட்​டி, தமிழகம் முழு​வதும் இருந்து பக்​தர்​கள் குவிந்​துள்​ளனர்.

Jul 7, 2025 - 18:25
 0  5
திருச்செந்தூரில் இன்று மகா கும்பாபிஷேக விழா: தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்

தூத்துக்குடி: ​திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயி​ல் மகா கும்​பாபிஷேகம் இன்று (7-ம் தேதி) நடை​பெறுகிறது. இதையொட்​டி, தமிழகம் முழு​வதும் இருந்து பக்​தர்​கள் குவிந்​துள்​ளனர்.

அறு​படை வீடு​களில் 2-வது படை வீடான திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் திருப்​பணி​கள் நிறைவு​பெற்​று, கும்​பாபிஷேக விழா ஜூன் 26-ம் தேதி கணபதி பூஜை​யுடன் தொடங்​கியது. கடந்த 1-ம் தேதி மாலை​யாக​சாலை பூஜைகள் தொடங்​கின. கரிய​மாணிக்க விநாயகர், பார்​வதி அம்​மன், மூல​வர், வள்​ளி, தெய்​வானைக்கு கோயில் உள்​புறம் தந்​திரி சுப்​பிரமணி​யரு தலை​மை​யிலும், சுவாமி சண்​முகர் மற்​றும் பரி​வாரமூர்த்​தி​களுக்கு ராஜகோபுரத்​தின் கீழ் உள்ள பிரம்​மாண்ட யாக​சாலை​யில் 71 ஹோம குண்​டங்​கள் அமைத்​து, 700 கும்​பங்​கள் வைக்​கப்​பட்​டு. 96 மூலிகைகள் இடப்​பட்டு பிச்சை சிவாச்​சா​ரி​யார் தலை​மை​யிலும் பூஜைகள் நடை​பெற்​றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow