மருதமலை முருகன் கோயிலில் தைப்பூசத் தேர்த் திருவிழா பிப்.4-ல் தொடக்கம்
மருதமலை முருகன் கோயிலில் தைப்பூசத் தேர்த்திருவிழா வரும் 4-ம் தேதி தொடங்குகிறது. வரும் 11-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது.

கோவை: மருதமலை முருகன் கோயிலில் தைப்பூசத் தேர்த் திருவிழா வரும் 4-ம் தேதி தொடங்குகிறது. வரும் 11-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது.
கோவை மருதமலை முருகன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத் தேர்த் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படும். அதன்படி, நடப்பாண்டுக்கான தைப்பூசத் திருத்தேர் திருவிழா வரும் பிப்ரவரி 4-ம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் விநாயகர் பூஜை, வாஸ்துசாந்தி பூஜை ஆகியவை நடக்கிறது. தொடர்ந்து மறுநாள் 5-ம் தேதி காலை கொடியேற்றம் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று கற்பக விருட்ச வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடக்கிறது. 6-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை தினமும் அபிஷேக பூஜை, சிறப்பு தீபாராதனை உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற உள்ளன.
What's Your Reaction?