திரைப் பார்வை: Mr.ஹவுஸ் கீப்பிங்
சமூகக் காணொளித் தளமான யூடியூபில் ‘நடிப்பு’ என்கிற சொந்தத் திறமையைக் கொண்டு முன்னேறியவர் ஹரி பாஸ்கர். இவரது ‘ஜம்ப் கட்’ வீடியோக்களுக்கு கணிசமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

சமூகக் காணொளித் தளமான யூடியூபில் ‘நடிப்பு’ என்கிற சொந்தத் திறமையைக் கொண்டு முன்னேறியவர் ஹரி பாஸ்கர். இவரது ‘ஜம்ப் கட்’ வீடியோக்களுக்கு கணிசமான ரசிகர்கள் இருக்கிறார்கள். தாமே எழுதி நடித்த சொந்தக் கதைகள் மூலம் யூடியூபில் கவனம் ஈர்த்து வந்த இவர், முதல் முறையாக முழு நீளத் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கும் படம் ‘Mr.ஹவுஸ் கீப்பிங்'. எவ்வித விளம்பர ஆரவாரமும் இன்றி ரிலீஸ் ஆகி இளம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இனி படம் குறித்த மதிப்பீட்டுக்குச் செல்வோம்.
கல்லூரி மாணவரான ஹானஸ்ட் ராஜ் (ஹரி பாஸ்கர்), சக மாணவியான இசையிடம் (லாஸ்லியா) கல்லூரிக் காலம் முழுவதும் துரத்தித் துரத்தித் தன் காதலைச் சொல்கிறார். இசையோ தன்னைத் துரத்துபவன், ‘பெண்ணை ஒரு பிகர்’ ஆகமாக மட்டுமே பார்ப்பவன் என்கிற மெச்சூரிட்டியான புரிதலுடன் அவனைத் துளியும் சட்டை செய்யாமல் நிராகரித்துவிடுகிறார். கடுப்பாகும் ஹானஸ்ட் ராஜ், நண்பர்கள் அனைவரும் சூழ்திருக்கும் கல்லூரியின் கடைசி நாள் விழாவில் இசையைப் பார்த்து, “உன்னை விட அழகான பெண்ணின் மனதில் இடம் பிடித்து, உன்னைவிட அதிகமாக சம்பாதித்து வாழ்க்கையிலும் ஜெயித்துக் காட்டுகிறேன். அப்படி என்னால் செய்ய முடியாவிட்டால் வாழ்நாள் முழுக்க உன் வீட்டில் வேலைக்காரனாக இருக்கத் தயார்” என்று சவால்விடுகிறார்.
What's Your Reaction?