தைப்பூசத் திருவிழா கோலாகலம்: திருச்செந்தூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்

Feb 12, 2025 - 01:00
 0  4
தைப்பூசத் திருவிழா கோலாகலம்: திருச்செந்தூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பழநியில் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற முழக்கத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை ஒரு மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து, விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. காலை 6.30 மணியளவில் அஷ்திரதேவருக்கு கடலில் தீர்த்தவாரி நடைபெற்றது. சுவாமி அலைவாயுகந்த பெருமான் பல்லக்கில் எழுந்தருளி வடக்கு ரத வீதியில் உள்ள தைப்பூச மண்டபத்தை வந்தடைந்தார். அங்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow