ராஜகோபுரம் சீரமைக்கப்பட்டு பழநி முருகன் கோயிலில் மீண்டும் நடந்த கும்பாபிஷேகம்
திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் ராஜகோபுரத்தின் உச்சியில் சேதமான ஒரு பகுதி (டகோரம்) சீரமைக்கப்பட்டு இன்று (அக்.24) காலை மீண்டும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் ராஜகோபுரத்தின் உச்சியில் சேதமான ஒரு பகுதி (டகோரம்) சீரமைக்கப்பட்டு இன்று (அக்.24) காலை மீண்டும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடு பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயில். இக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். ஆண்டுதோறும் தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் இங்கு வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
What's Your Reaction?