ராகு கேது: திரைப் பார்வை - பக்தியும் பயமும் ஜெயமும்
கட்டங்களை நம்பும் யாரொருவருக் கும் நவக் கிரகங்கள் மீது பக்தியும் பயமும் உண்டு. ஆனால், நவக் கிரகங்கள் எப்படி உருவாகின என்று எல்லாரும் தெரிந்துகொண்டிருப்பார் களா என்றால் சந்தேகம்தான்.

கட்டங்களை நம்பும் யாரொருவருக்கும் நவக் கிரகங்கள் மீது பக்தியும் பயமும் உண்டு. ஆனால், நவக் கிரகங்கள் எப்படி உருவாகின என்று எல்லாரும் தெரிந்துகொண்டிருப்பார் களா என்றால் சந்தேகம்தான். அதை விரிவாகவும் சுவாரசியமாகவும் படைத் திருக்கிறது இந்தப் புராணப் பக்திப் படம். அசுரர்களுடனான தொடர் மோதலில் இந்திராதி தேவர்கள் நொந்துபோய், இனி இறப்பே இல்லாத வரம் வேண்டும் என்று பாற்கடல் வாசனாகிய மகா விஷ்ணுவிடம் போய் மண்டியிடுகிறார்கள்.
அவரோ, “மந்தார மலையை மத்தாக்கி, வாசுகி பாம்பைக் கயிறாகப் பயன்படுத்தி இந்தப் பாற் கடலைக் கடையுங்கள். அதிலிருந்து கிடைக்கும் அமுதத்தை உண்டால் இறப்பே கிடையாது” என்கிறார். போர் நடத்தி நடத்தி வலிமை குன்றி யிருக்கும் தேவர்கள், பாற்கடலைக் கடைய, நாரதரின் உதவியுடன் அசுரர்களை அழைத்து வருகிறார்கள்.
What's Your Reaction?