மோட்ச கதி அடைய கழுகுமலை கழுகாசல மூர்த்தி வழிபாடு!
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் சாலையில் சுமார் 22 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கழுகு மலை கழுகாசல மூர்த்தி கோயில்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் சாலையில் சுமார் 22 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கழுகு மலை கழுகாசல மூர்த்தி கோயில். இந்த தலத்துக்கு புராணப் பெருமைகளும், சரித்திரச் சிறப்புகளும் ஏராளம். இந்த ஊரை தென்பழநி, உவணகிரி, கஜமுக பர்வதம், கழுகாசலம், சம்பாதி சேத்திரம் என்றும் அழைக்கின்றனர்.
தல புராணம்: திரேதா யுகத்தில் சீதாதேவியை கடத்திச் சென்ற ராவணனிடம் இருந்து அவளைக் காப்பாற்ற முயற்சித்து, மரணத்தைத் தழுவினார் ஜடாயு. அவருக்கு ஸ்ரீராமனே ஈமக்கிரியைகள் செய்து மோட்ச கதி அளித்தார். இந்தத் தகவல்களை எல்லாம் அறிந்த ஜடாயுவின் சகோதரன் சம்பாதி, 'என் உயிருக்குயிரான சகோதரருக்கு ஈமக்கிரியைகள் செய்ய இயலாத சண்டாளனாகிவிட்டேனே’ என்று வருந்தினார்.
What's Your Reaction?