மேல்மலையனுார் கோயிலில் மயானக் கொள்ளை
மேல்மலையனுார் அங்காளம்மன் கோயிலில் நேற்று நடந்த மயானக் கொள்ளை நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி அம்மனை வழிபட்டனர்.

விழுப்புரம்: மேல்மலையனுார் அங்காளம்மன் கோயிலில் நேற்று நடந்த மயானக் கொள்ளை நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி அம்மனை வழிபட்டனர்.
மேல்மலையனுார் அங்காளம்மன் கோயில் மாசி தேர்த் திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இரண்டாம் நாளான நேற்று மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி நேற்று அதிகாலை 5 மணிக்கு அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டது.
What's Your Reaction?