சிறுவாபுரி கோயிலில் திருக்கல்யாணம்: திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்
சிறுவாபுரி ஸ்ரீ வள்ளி முருகன் திருக்கல்யாண பக்தஜன சங்கம் சார்பில் நேற்று சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாண நிகழ்வில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

பொன்னேரி: சிறுவாபுரி ஸ்ரீ வள்ளி முருகன் திருக்கல்யாண பக்தஜன சங்கம் சார்பில் நேற்று சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாண நிகழ்வில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற முருகன் கோயில்களில் ஒன்றான பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது.
இக்கோயிலில், சிறுவாபுரி ஸ்ரீ வள்ளி முருகன் திருக்கல்யாண பக்தஜன சங்கம் சார்பில் நேற்று 16-ம் ஆண்டாக திருக்கல்யாண நிகழ்வு நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு, நேற்று காலை விநாயகர், மூலவரான பாலசுப்பிரமணியர், அண்ணாமலையார், உண்ணாமுலை அம்மன், ஆதி மூலவர், பைரவர், நவகிரகங்களுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
What's Your Reaction?