மூங்கிலில் டீ கிளாஸ் முதல் டூத் பிரஷ் வரை: இலவசமாக தயாரிப்பு பயிற்சி அளிக்கும் மதுரை தம்பதி!
பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் மூங்கிலில் தண்ணீர் குவளைகள், பல்துலக்கும் பிரஷ் என பல்வேறு பொருட்களை தயாரிக்கும் முறை குறித்து மகளிர் குழுவினருக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் இலவசமாக பயிற்சி அளித்து தொழில்முனைவோராக வழி்காட்டுகின்றனர் மதுரையைச் சேர்ந்த தம்பதி.

மதுரை: பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் மூங்கிலில் தண்ணீர் குவளைகள், பல்துலக்கும் பிரஷ் என பல்வேறு பொருட்களை தயாரிக்கும் முறை குறித்து மகளிர் குழுவினருக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் இலவசமாக பயிற்சி அளித்து தொழில்முனைவோராக வழி்காட்டுகின்றனர் மதுரையைச் சேர்ந்த தம்பதி.
மதுரை எஸ்.எஸ்.காலனியைச் சேர்ந்தவர் சுதாகர் செல்வராஜ் (44). இவர் ஒரு சூழலியல் சுற்றுலா வழிகாட்டி. இவரது மனைவி தர்ஷணா. எம்பிஏ பட்டதாரி. இவர்கள் இருவரும் இணைந்து மூங்கிலில் தண்ணீர் குவளைகள், டீ குவளைகள், டூத் பிரஷ், மூங்கில் புட்டுக்குழாய், செல்போன் ஸ்டாண்ட், பரிசுக் கோப்பைகள் பல்வேறு பொருட்களை தயாரித்து விற்பனை செய்துவருகின்றனர். மேலும் பொருட்கள் தயாரிக்கும் முறைகள் குறித்து மகளிர் சுயஉதவி குழுக்களைச் சேர்ந்த பெண்களுக்கும், பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆகியோருக்கும் இலவசமாக பயிற்சியும் அளித்து வருகின்றனர்.
What's Your Reaction?