மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா ஏப். 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, மாலை நேரங்களில் சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தனர்.

மதுரை: மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு மதுரையில் நேற்று மாசி வீதிகளில் நடைபெற்ற தேரோட்டத்தின்போது ‘‘ஹரஹர சங்கர மகாதேவா, மீனாட்சி சுந்தர மகாதேவா’’ முழக்கங்களுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா ஏப். 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, மாலை நேரங்களில் சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தனர். நேற்று முன்தினம் மீனாட்சி- சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெற்றது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலை சுவாமியும், அம்மனும் மாசி வீதிகளில் மண்டகப்படிகளில் எழுந்தருளி கீழமாசி வீதி தேரடிக்கு வந்தனர்.
What's Your Reaction?