மீண்டும் சந்திப்போமா? -  கதை

கடற்கரையில் இருந்த மணல் பொந்துக்குள்ளிருந்து வெளியே வந்தது ஒரு குஞ்சு உள்ளான். “அடேயப்பா, இந்த உலகம் எவ்வளவு அழகு!” என்று நினைத்தது. அம்மா உள்ளான் மற்ற உள்ளான்களுடன் இரை தேடிச் சென்றிருந்தது.

Jun 11, 2025 - 12:55
 0  3
மீண்டும் சந்திப்போமா? -  கதை

கடற்கரையில் இருந்த மணல் பொந்துக்குள்ளிருந்து வெளியே வந்தது ஒரு குஞ்சு உள்ளான். “அடேயப்பா, இந்த உலகம் எவ்வளவு அழகு!” என்று நினைத்தது. அம்மா உள்ளான் மற்ற உள்ளான்களுடன் இரை தேடிச் சென்றிருந்தது. ‘எதையாவது சாப்பிடுவோம்’ என்று நினைத்த குஞ்சு உள்ளான், சிறிய கற்களை அலகால் தள்ளிப் பார்த்தது. மணற் குவியலில் இருந்த ஒரு கல்லை அலகால் கொத்தியது. உடனே அந்தக் கல் அசைந்தது! பயத்தில் சற்றுத் தள்ளி நின்றது.

சில நிமிடங்களில் மணல் குவியலிலிருந்து ஒரு தலை எட்டிப் பார்த்தது. இதுவும் ஒரு பறவைதான் போல என்று உள்ளான் நினைத்தது. “நான் பறவை இல்லை. கடல் ஆமை” என்றதும் உள்ளானுக்கு வியப்பு. “ஓ! அப்படியா? நீ கறுப்பு நட்சத்திரம் போல இருக்கிறாய்” என்று புகழ்ந்த உள்ளான், அடுத்தடுத்து வெளியே வந்த நூற்றுக்கணக்கான குஞ்சு ஆமைகளைப் பார்த்தது. அதற்குள் அந்த ஆமை, “பேசிக்கொண்டே இருக்காதே. பசிக்கிறது. ஏதாவது சாப்பிடத் தருகிறாயா?” என்றது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow