மின் கட்டண குறைப்பு முதல் தூர்வாருதல் வரை - முதல்வர் ஸ்டாலினிடம் கோவை தொழில் துறையினர் எதிர்பார்ப்பு
கோவையில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இன்று முதல்வர் கோவை வருகை தந்துள்ள நிலையில், ஏராளமான கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும் என தொழில் துறையினர் எதிர்பார்க்கின்றனர்.

கோவை: கோவையில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இன்று முதல்வர் கோவை வருகை தந்துள்ள நிலையில், ஏராளமான கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும் என தொழில் துறையினர் எதிர்பார்க்கின்றனர்.
தொழில் நகரான கோவை மாவட்டத்தின் மக்கள் தொகை 30 லட்சத்தை கடந்துள்ளது. முன்பு தொழிலுக்கு மட்டும் பெயர் பெற்ற கோவை தற்போது கல்வி, மருத்துவம், சுற்றுலா, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் புகழ் பெற்று விளங்குகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் கோவையில் தங்கி தொழில் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.
What's Your Reaction?