மாறுகிறேன், எனவே வாழ்கிறேன் | தேன் மிட்டாய் 34

நீ என்னவாக மாற விரும்புகிறாய் என்று கேட்டால் தயங்காமல் சொல்வேன். ஒரு பச்சோந்தியாக. அதுதான் என் இலக்கு. அதை அடைவதற்குத்தான் போராடிக் கொண்டிருக்கிறேன். ஏன் போராட்டம் என்றால், ஒரு பச்சோந்தியாக மாறுவது எளிதல்ல.

Dec 25, 2024 - 12:30
 0  4
மாறுகிறேன், எனவே வாழ்கிறேன் | தேன் மிட்டாய் 34

நீ என்னவாக மாற விரும்புகிறாய் என்று கேட்டால் தயங்காமல் சொல்வேன். ஒரு பச்சோந்தியாக. அதுதான் என் இலக்கு. அதை அடைவதற்குத்தான் போராடிக் கொண்டிருக்கிறேன். ஏன் போராட்டம் என்றால், ஒரு பச்சோந்தியாக மாறுவது எளிதல்ல. நிறைய உழைக்க வேண்டும். நிறைய கற்க வேண்டும். நிறைய அனுபவம் பெற வேண்டும். நிறைய ஆராய வேண்டும். ஆனால் பாருங்கள், ஒரு பச்சோந்தி சர்வ சாதாரணமாக இயல்பிலேயே முழு நிறைவான ஓர் உயிராக இருக்கிறது. ‘பெர்ட்ரண்ட் ரஸல்’ ஆக இருப்பது அல்ல, ஒரு பச்சோந்தியாக இருப்பதுதான் என்னைப் பொறுத்தவரை பெரும் சாதனை.

‘உயிரே போனாலும் நான் மாற மாட்டேன். குழந்தையாக இருந்தபோது எப்படி இருந்தேனோ அப்படித்தான் இப்போதும் இருக்கிறேன். இனியும் இருப்பேன்.’ இப்படி ஒருவரால் அறிவிக்க முடியும் என்றால், அவர் மிக நல்ல மனிதராகத்தான் இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைப்பீர்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow