மாணவப் படைப்பாளிகளை ஊக்குவித்த கண்காட்சி

தென்னிந்தியாவின் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த ஆர்வமுள்ள மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்குத் திறன் பயிற்சி வழங்கி, புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்க வழிகாட்டுகிறது.

Mar 25, 2025 - 14:05
 0  3
மாணவப் படைப்பாளிகளை ஊக்குவித்த கண்காட்சி

அறிவியல் ஆய்வுகளில் ஆர்வம் கொண்ட கல்லூரி மாணவர்களை ஊக்குவிக்கவும், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க வழிகாட்டவும் சென்னை ஐஐடியின் முன்னாள் மாணவர்களின் ‘பிஏஎல்எஸ்’ எனும் அமைப்பு கடந்த 2012ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. அறிவியலில் வெவ்வேறு துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய இந்த அமைப்பு, தென்னிந்தியாவின் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த ஆர்வமுள்ள மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்குத் திறன் பயிற்சி வழங்கி, புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்க வழிகாட்டுகிறது.

பல்வேறு பகுதிகளில் இருந்தும் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்ற ‘innoWAH’ போட்டியை சென்னை ஐஐடி வளாகத்தில் இந்த அமைப்பு அண்மையில் நடத்தியது. ‘innoWAH’ போட்டியின் இந்த ஆண்டின் கருப்பொருள் ‘தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் மாற்றம் - VIKSIT BHARAT@2047’ என்பதாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பல கட்ட ஆய்வுக்குப் பிறகு இந்நிகழ்வின் இறுதிப்போட்டிக்கு 41 கல்லூரிகளில் இருந்து 62 அணிகள் தேர்வாகி இருந்தன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow