மறதியால் தொலைந்துபோனவை | கல்லறைக் கதைகள் 18
கிரேக்க மொழியில் பொ.ஆ. 2-3 ஆம் நூற்றாண்டில் செதுக்கப்பட்ட கல்வெட்டில் இரு சொற்கள் எழுதப்பட்டிருந்தன. அதற்கு, பீட்டர் இங்கே உள்ளார் அல்லது பீட்டர் அமைதியாகத் துயில்கிறார் என்று அர்த்தம்.

புனித பீட்டரின் கல்லறை அமைந்திருந்த இடத்தில் கோயில் கட்டுவதற்காக வாடிகன் குன்றின் பெரும்பகுதி சமன்படுத்தப்பட்டது. புதிய கோயிலின் நடு பீடம் பீட்டரின் கல்லறைக்கு நேர் மேலே அமையுமாறு திட்டமிடப்பட்டது. ஆனால், பீட்டரின் கல்லறைக்கு மேலே ஏற்கெனவே கட்டப்பட்டிருந்த நினைவுக்கூடத்தை இடிக்கக் கிறிஸ்தவர்கள் விரும்பவில்லை.
சவப்பெட்டி கொள்ளை: புதிய கோயிலைக் கட்டியபோது பீட்டரின் நினைவுக்கூடம் சிறிய ஆலயமாக மாற்றம் பெற்றது. அது இன்று, நம்பிக்கை அறிக்கையின் சிற்றாலயம் என்று அழைக்கப்படுகிறது. இந்தச் சிறிய ஆலயத்தின் நேர் மேலே புதிய கோயிலின் பீடம் வருமாறு கட்டப்பட்டது. இந்தக் கட்டிட அமைப்பு இன்றுவரை நீடித்துள்ளது.
புனித பீட்டரின் சடலத்தை உள்ளடக்கிய கல்பெட்டி நான்கு பக்கங்களிலும் வெண்கலத்தால் போர்த்தப்பட்டது. அதன் நீள, அகல, உயர அளவு ஒவ்வொன்றும் 5 அடி. அதன்மேல் 150 பவுண்டு எடையுள்ள ஒரு தங்கச் சிலுவை நிறுவப்பட்டது.
What's Your Reaction?