கேல் ரத்னா விருதுகள் முதல் சட்டப்பேரவை முதல் கூட்டம் வரை: சேதி தெரியுமா? @ ஜன. 1-7
உயரிய விருதான கேல் ரத்னா விருது தமிழகத்தைச் சேர்ந்த உலக செஸ் சாம்பியன் டி.குகேஷ், துப்பாக்கி சுடுதல் வீரர் மனு பாகர், இந்திய ஆண்கள் ஹாக்கி அணித் தலைவர் ஹர்மன்ப்ரீத் சிங், பாரா ஒலிம்பிக் வீரர் பிரவீன் குமார் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது.

சேதி தெரியுமா?
டிச.31: கேரளத்தின் பாலக்காட்டைச் சேர்ந்த செவிலியரான நிமிஷா பிரியாவுக்கு 2018ஆம் ஆண்டு வழங்கப்பட்ட மரண தண்டனை தீர்ப்புக்கு ஏமன் நாட்டு அதிபர் ரஷாத் அல்-அலிமி அனுமதி வழங்கினார்.
ஜன.1: சென்னை, மதுரை, திருச்சி உள்பட 16 மாநகராட்சிகள், 41 நகராட்சிகளை விரிவாக்கம் செய்யவும், கன்னியாகுமரி உள்பட 14 நகராட்சிகள், 25 பேரூராட்சிகளை உருவாக்குவதற்கான மறுசீரமைப்புப் பணிகளையும் தமிழ்நாடு அரசு தொடங்கியது.
What's Your Reaction?