மருதமலை முருகன் கோயிலில் ஆகஸ்ட் முதல் ‘லிஃப்ட்’ வசதி - செயல்படுவது எப்படி?

மருதமலை முருகன் கோயிலில் அமைக்கப்பட்டுவரும் ‘லிஃப்ட்’ பணிகளை விரைவாக முடித்து ஆகஸ்ட் மாதம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்

Jun 20, 2025 - 15:00
 0  3
மருதமலை முருகன் கோயிலில் ஆகஸ்ட் முதல் ‘லிஃப்ட்’ வசதி - செயல்படுவது எப்படி?

மருதமலை முருகன் கோயிலில் அமைக்கப்பட்டுவரும் ‘லிஃப்ட்’ பணிகளை விரைவாக முடித்து ஆகஸ்ட் மாதம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவை மருதமலையில் அடிவாரத்தில் இருந்து மலை மீதுள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பக்தர்கள் வந்தடைய மலைப் பாதை, படிக்கட்டுப் பாதைகள் உள்ளன. மலை மீது வாகனம் நிறுத்தும் இடத்தில் இருந்து பக்தர்கள் 150 படிக்கட்டுகளை கடந்து, 35 மீட்டர் உயரத்துக்கு மேலே சென்று சுவாமியை தரிசனம் செய்ய வேண்டியுள்ளது. எனவே, பக்தர்கள் வசதிக்காக இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ரூ.5.20 கோடி மதிப்பில் லிஃப்ட் (மின் தூக்கி) அமைக்கும் பணிகள் கடந்தாண்டு முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow