தினமும் 100 கிலோ வண்ண மலர்களால் திருப்பதி ஏழுமலையானுக்கு அலங்காரம்

அலங்கார பிரியரான திருப்பதி ஏழுமலையானுக்கு தினமும் விதவிதமான மலர் மாலைகள் காலை, மாலை என இரு வேளையும் சூட்டப்படுகிறது. இதற்காக 12 வகைக்கும் மேலான மலர்களும், துளசி, தவனம் போன்ற 6-க்கும் மேற்பட்ட இலைகளும் பயன்படுத்தப்படுகின்றன.

Sep 9, 2025 - 10:35
 0  4
தினமும் 100 கிலோ வண்ண மலர்களால் திருப்பதி ஏழுமலையானுக்கு அலங்காரம்

திருமலை: அலங்கார பிரியரான திருப்பதி ஏழுமலையானுக்கு தினமும் விதவிதமான மலர் மாலைகள் காலை, மாலை என இரு வேளையும் சூட்டப்படுகிறது. இதற்காக 12 வகைக்கும் மேலான மலர்களும், துளசி, தவனம் போன்ற 6-க்கும் மேற்பட்ட இலைகளும் பயன்படுத்தப்படுகின்றன.

சாதாரண நாட்களில் தினமும் 100 கிலோ பூக்கள் மூலவரின் மலர் அலங்காரத்துக்கு பயன்படுத்தப்படுகின்றன. இதுவே ஒவ்வொரு வியாழக்கிழமையும் மூலவருக்கு பூக்களால் மட்டுமே முழு அலங்காரம் செய்யப்படும். இதனை பூ அங்கி சேவை என அழைக்கின்றனர். இதற்கு 200 கிலோ பூக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow