பஹ்ரைனில் அன்னை தமிழ் மன்றத்தின் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி

பஹ்ரைனில் அன்னை தமிழ் மன்றம், இந்தியன் கிளப் உடன் இணைந்து நேற்று (மார்ச் 21) இஃப்தார் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. 

Mar 22, 2025 - 20:40
 0  5
பஹ்ரைனில் அன்னை தமிழ் மன்றத்தின் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி

பஹ்ரைன்: பஹ்ரைனில் அன்னை தமிழ் மன்றம், இந்தியன் கிளப் உடன் இணைந்து நேற்று (மார்ச் 21) இஃப்தார் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: பல்வேறு சமூக நற்பணிகளைச் செய்துவரும் அன்னை தமிழ் மன்றம், இந்தியன் கிளப் உடன் இணைந்து வெள்ளிக்கிழமை இஃப்தார் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. இந்நிகழ்வில் பஹ்ரைன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மரியம் அல் டைன், ஹனான் ஃபர்தான் மற்றும் , பஹ்ரைன் பாதுகாப்புத் துறை முன்னாள் அதிகாரி ஹிஷாம் ஸால் கலீஃபா மற்றும் சல்மான் அல் ஃபாதல் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அன்னை தமிழ் மன்றத்தின் தலைவர் செந்தில் ஜிகே மற்றும் பொதுச் செயலாளர் பழனிச்சாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களை வரவேற்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow