ஸ்ரீரங்கம் கோயில் உற்சவருக்கு வைர கிரீடத்தை காணிக்கையாக வழங்கிய பரதநாட்டிய கலைஞர் ஜாகிர் உசேன்!

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலின் உற்சவர் நம்பெருமாளுக்கு பல கோடி மதிப்புள்ள வைர கிரீடத்தை பரதநாட்டிய கலைஞரான ஜாகிர் உசேன் ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் மாரியப்பன், தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர் ஆகியோரிடம் இன்று  காணிக்கையாக வழங்கினார்.

Dec 11, 2024 - 20:00
 0  3
ஸ்ரீரங்கம் கோயில் உற்சவருக்கு வைர கிரீடத்தை காணிக்கையாக வழங்கிய பரதநாட்டிய கலைஞர் ஜாகிர் உசேன்!

திருச்சி: 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலின் உற்சவர் நம்பெருமாளுக்கு பல கோடி மதிப்புள்ள வைர கிரீடத்தை பரதநாட்டிய கலைஞரான ஜாகிர் உசேன், ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் மாரியப்பன், தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர் ஆகியோரிடம் இன்று காணிக்கையாக வழங்கினார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் ஜாகிர் உசேன் கூறும்போது, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் மீது எனக்குள்ள பக்தியால் இந்த வைர கிரீடத்தை காணிக்கையாக அளித்துள்ளேன். ஏறத்தாழ அரை அடி உயரம் கொண்ட இந்த கிரீடமானது 3160 கேரட் மாணிக்கக் கல், 600 வைரக் கற்கள் மற்றும் மரகதக் கல்லைக் கொண்டு தங்கத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow