நாகூர் தர்காவில் பக்ரீத் சிறப்பு தொழுகை: ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்பு
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நாகூர் தர்காவில் நேற்று நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

நாகப்பட்டினம்: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நாகூர் தர்காவில் நேற்று நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
இறைதூதரான நபிகளாரின் தியாகத்தை நினைவுகூரும் வகையில், முஸ்லிம்கள் பக்ரீத் பண்டிகையை கொண்டாடுகின்றனர். அதன்படி, நாகை மாவட்டம் நாகூரில் உள்ள பிரசித்தி பெற்ற தர்காவில் நேற்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி அங்கு நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஏராளமான முஸ்லிம்கள் பங்கேற்றனர். அப்போது காசாவில் அமைதியும், சமாதானமும் நிலவ பிரார்த்தனை செய்யப்பட்டது.
What's Your Reaction?