அனைவருக்கும் தாயாக விளங்கும் உறையூர் தான்தோன்றீஸ்வரர் | ஞாயிறு தரிசனம்
சூரவாதித்த சோழ மன்னன், காந்திமதி என்ற நாககன்னிகை மீது விருப்பம் கொண்டு, நாகலோகத் தலைவர் ஆதிசேஷனின் அனுமதி பெற்றுஅவளை மணந்து கொண்டான்.

மூலவர்: தான்தோன்றீஸ்வரர் அம்பாள்: குங்குமவல்லி தல வரலாறு: சூரவாதித்த சோழ மன்னன், காந்திமதி என்ற நாககன்னிகை மீது விருப்பம் கொண்டு, நாகலோகத் தலைவர் ஆதிசேஷனின் அனுமதி பெற்றுஅவளை மணந்து கொண்டான். சிவபக்தையான காந்திமதி திருச்சிராப்பள்ளி மலையில் வீற்றிருக்கும் தாயுமான சுவாமியை தினமும் வணங்குவதை வழக்கமாக கொண்டிருந்தாள். திருமணத்துக்குப் பின் கர்ப்பவதியான அவளுக்கு மலையேற மிகவும் சிரமமாக இருந்தது. அதையும் பொருட்படுத்தாமல், அவள் மலையேறி வழிபாடு செய்தாள்.
அவள் மீது இரக்கம் கொண்ட சிவபெருமான், தானே அங்கு தோன்றி, “மகளே.. காந்திமதி.. கலங்க வேண்டாம். உனக்கு பிரசவம் ஆகும்வரை நான் மலையடிவாரத்திலேயே அமர்வேன். நீ என்னை அவ்விடத்திலேயே வணங்கலாம். நான் தான்தோன்றீஸ்வரர் என்ற அழைக்கப்படுவேன். பார்வதிதேவி உன்னை போன்ற பெண்களுக்கு தாயாக இருந்து பிரசவம் பார்ப்பாள். அவள் குங்குமம் காப்பாள், குங்குமவல்லி என்று அழைக்கப்படுவாள்” என்று திருவாய் மலர்ந்தார். அதன்படி ஈசன் அருளால் காந்திமதி குழந்தையைப் பெற்றெடுத்தாள்.
What's Your Reaction?