பிரதமர் மோடியுடன் பாலிவுட் பிரபலங்கள் சந்திப்பு: ராஜ்கபூர் திரைப்பட விழாவுக்கு அழைப்பு!

மறைந்த பழம்பெரும் பாலிவுட் நடிகர் ராஜ்கபூரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு டிசம்பர் 14-ம் தேதி நடைபெறும் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு பாலிவுட் திரைப்பிரபலங்கள் நேரில் அழைப்பு விடுத்தனர். 

Dec 11, 2024 - 18:15
 0  3
பிரதமர் மோடியுடன் பாலிவுட் பிரபலங்கள் சந்திப்பு: ராஜ்கபூர் திரைப்பட விழாவுக்கு அழைப்பு!

புது டெல்லி: மறைந்த பழம்பெரும் பாலிவுட் நடிகர் ராஜ்கபூரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு டிசம்பர் 14-ம் தேதி நடைபெறும் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு பாலிவுட் திரைப்பிரபலங்கள் நேரில் அழைப்பு விடுத்தனர்.

ரன்பீர் கபூர், ஆலியா பட், கரீனா கபூர், சயீஃப் அலி கான், கரிஷ்மா கபூர், ரித்திமா கபூர் சாஹ்னி, ஆதார் ஜெயின், அர்மான் ஜெயின் மற்றும் நீது கபூர் உள்ளிட்ட பலர் பிரதமர் மோடியை நேரில் சந்தித்தனர். பழம்பெரும் நடிகர் ராஜ்கபூரின் நூற்றாண்டு விழா டிசம்பர் 14-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நடைபெறும் திரைப்பட விழாவில் கந்துகொள்ள பிரதமர் மோடிக்கு அவர்கள் அழைப்பு விடுத்தனர். இந்த சந்திப்பின்போது, பாலிவுட் நடிகர்களுடன் மோடி உரையாடினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow