ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்: ‘கோவிந்தா, கோபாலா’ கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்

ஸ்ரீவில்லிபுத்தூர் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற திருவிழாக்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் இன்று காலை 9.10 மணிக்கு வெகு விமரிசையாக தொடங்கியது.

Jul 28, 2025 - 11:40
 0  3
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்: ‘கோவிந்தா, கோபாலா’ கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்

ஸ்ரீவில்லிபுத்தூர் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற திருவிழாக்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் இன்று காலை 9.10 மணிக்கு வெகு விமரிசையாக தொடங்கியது. கோவிந்தா கோபாலா கோஷம் முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து நான்கு ரதவீதிகள் வழியாக தேர் இழுத்தனர்.

108 வைணவ திவ்ய தேசங்களில் முக்கியமான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மூலவர் வடபத்ரசயனர், பெரியாழ்வார், ஆண்டாள் ஆகிய மூவர் அவதரித்த சிறப்புக்குரியதால் முப்புரி ஊட்டிய தலம் என அழைக்கப்படுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய பெருமாள் அவதார விழாவான புரட்டாசி பிரம்மோற்சவம், பெரியாழ்வார் அவதரித்த ஆனி சுவாதி உற்சவம், ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம் ஆகியவை முக்கியமான திருவிழாக்களாக கொண்டாடப்படுவது வழக்கம். ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூர தேரோட்ட திருவிழா கடந்த 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாள் இரவு 16 சக்கர தேரில் ஆண்டாள் ரெங்கமன்னார் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow