ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சித்திரை தேர் திருவிழா - மகிழ்ச்சி வெள்ளத்தில் மக்கள் 

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சித்திரை தேர் திருவிழா இன்று விமரிசையாகக் கொண்டாடப்பட்டது; இதில் பக்தர்கள் "ரெங்கா.. கோவிந்தா.." கோஷம் விண்ணதிர தேரை வடம்பிடித்து இழுத்தனர். 

Apr 26, 2025 - 13:20
 0  4
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சித்திரை தேர் திருவிழா - மகிழ்ச்சி வெள்ளத்தில் மக்கள் 

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சித்திரை தேர் திருவிழா விமரிசையாக இன்று கொண்டாடப்பட்டது; இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு "ரெங்கா.. கோவிந்தா.." என்ற கோஷம் விண்ணதிர தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் தைத்தேர், பங்குனித் தேர், சித்திரைத் தேர் என மூன்று தேர் திருவிழாக்கள் நடைபெறும். இத்திருவிழாக்களில் விருப்பன் திருநாள் என்றழைக்கப்படும் சித்திரைத் தேர் திருவிழா, பல்லாயிரக்கணக்கான கிராம மக்கள் பங்கேற்கும் விழாவாக விளங்குகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow