‘மரியே வாழ்க’, ‘ஆவே மரியா’ முழக்கத்துடன் வேளாங்கண்ணி பேராலய பெரிய தேர் பவனி கோலாகலம்

இதில் லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள் கலந்​து​ கொண்​டனர். நாகை மாவட்​டம் வேளாங்​கண்​ணி​யில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற புனித ஆரோக்​கிய அன்னை பேராலய ஆண்டுப் பெரு​விழா ஆக. 29-ம் தேதி கொடியேற்​றத்​துடன் தொடங்​கியது.

Sep 8, 2025 - 07:45
 0  4
‘மரியே வாழ்க’, ‘ஆவே மரியா’ முழக்கத்துடன் வேளாங்கண்ணி பேராலய பெரிய தேர் பவனி கோலாகலம்

நாகப்பட்டினம்: வேளாங்​கண்ணி புனித ஆரோக்​கிய அன்னை பேராலய ஆண்​டுப் பெரு​விழா பெரிய தேர் பவனி நேற்று இரவு கோலாகல​மாக நடை​பெற்​றது. இதில் லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள் கலந்​து​ கொண்​டனர். நாகை மாவட்​டம் வேளாங்​கண்​ணி​யில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற புனித ஆரோக்​கிய அன்னை பேராலய ஆண்​டுப் பெரு​விழா ஆக. 29-ம் தேதி கொடியேற்​றத்​துடன் தொடங்​கியது. தொடர்ந்​து, தின​மும் சிறப்பு பிரார்த்​தனை, நவநாள் திருப்​பலி, மாதா மன்​றாட்​டு, நற்​கருணை ஆசி உள்​ளிட்​டவை நடை​பெற்​றன.

இந்​நிலை​யில், விழா​வின் முக்​கிய நிகழ்ச்​சி​யான பெரிய தேர் பவனி நேற்று இரவு கோலாகல​மாக நடை​பெற்​றது. இதையொட்​டி, பேராலய கலை​யரங்​கில் மாலை புதுச்​சேரி - கடலூர் உயர் மறை​மாவட்ட பேராயர் பிரான்​சிஸ் கலிஸ்ட் தலை​மை​யில் கூட்​டுப் பாடல் திருப்​பலி நடை​பெற்​றது. பின்​னர், மின் விளக்​கு​களால் அலங்​கரிக்​கப்​பட்ட பெரிய தேரை பேராயர் பிரான்​சிஸ் கலிஸ்ட் புனிதம் செய்​து​ வைத்​தார். தொடர்ந்​து, பெரிய தேரில் புனித ஆரோக்​கிய அன்னை எழுந்​தருளி​னார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow