ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் இன்று தொடக்கம்
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று சுவாமிக்கு பட்டு வஸ்திரத்தை காணிக்கையாக வழங்க உள்ளார்.

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று சுவாமிக்கு பட்டு வஸ்திரத்தை காணிக்கையாக வழங்க உள்ளார். உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கி, அக்டோபர் 2-ம் தேதி சக்கர ஸ்நானத்துடன் நிறைவடைய உள்ளது.
பக்தர்கள் திருமலைக்கு வந்து செல்ல 24 மணி நேரமும் திருப்பதியில் இருந்து பேருந்து போக்குவரத்து வசதி, தலைமுடி காணிக்கை, மூலவரின் தரிசனம், அன்னபிரசாதம், வாகன சேவைகளை கண்டு களிக்க மாட வீதிகளில் சிறப்பு வசதிகளை தேவஸ்தானம் செய்துள்ளது. திருமலைக்கு வரும் பக்தர்கள் தங்குவதற்கான அறைகள் ரு.50 முதல் 600 வரை மிக குறைந்த வாடகைக்கு வழங்கப்பட உள்ளன. இதற்காக திருமலையில் 3,500 அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
What's Your Reaction?