மரணமில்லா பெருவாழ்வுக்கு உறுப்பு தானம்!

இறப்பை கடந்து வாழ்க்கையின் இரக்கம், நம்பிக்கை மற்றும் வெற்றியைக் கொண்டாடும் நாள் இன்று, உலகம் முழுவதும் உடல் உறுப்பு தான தினம் ஆக.13-ம் தேதி அனுசரிக்கப் படுகிறது

Aug 13, 2025 - 15:20
 0  4
மரணமில்லா பெருவாழ்வுக்கு உறுப்பு தானம்!

இறப்பை கடந்து வாழ்க்கையின் இரக்கம், நம்பிக்கை மற்றும் வெற்றியைக் கொண்டாடும் நாள் இன்று. உலகம் முழுவதும் உடல் உறுப்பு தான தினம் ஆக.13-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. மருத்துவ அறிவியல் அபரிமிதமான வளர்ச்சி அடைந்துள்ள இந்த உலகில், உறுப்பு தானம் என்பது உறுப்பு செயலிழப்பு காரணமாக அவதிப்படும் ஒருவருக்கு மறுவாழ்வு அளிக்கும் அற்புதமான செயலாகும். இந்தியாவிலேயே தமிழகம்தான் உடல் உறுப்பு தானம் வழங்குவதில் முதலிடத்தில் உள்ளது.

அதன்படி, கடந்தாண்டு மூளைச்சாவு அடைந்த 268பேரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், மாற்று அறுவை சிகிச்சைக் கு தேவைப்படும் உறுப்பு கள் கிடைக்காமல் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மேற்கத்திய நாடுகளில் 80 சதவீதம் பேர் உடல் உறுப்புகளை தானம் வழங்க உறுதி எடுக்கின்றனர். ஆனால், இந்தியாவில் இது 1 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow