உணவு சுற்றுலா: வட ஆற்காடு சிமிலி உருண்டை
சரித்திரத்தில் புகழ்பெற்றவை ஆற்காடு மாவட்டங்கள். எத்தனை சாம்ராஜ்யங்கள்… பல்வேறு போர்கள்… கலாச்சாரப் பரிமாற்றங்களைக் கடந்து, கம்பீரமாக நிற்கின்றன ஆற்காடு மாவட்டங்கள். இப்போது பல மாவட்டங்களாகப் பிரிந்துவிட்டாலும், உணவியல்ரீதியில் ஆற்காடு மாவட்டங்களுக்குப் பல்வேறு ஒற்றுமைகள் உள்ளன. அந்தப் பகுதிகளில் கிடைக்கும் பிரியாணி ரகங்கள், இனிப்பு ரகங்கள், உணவுப் பண்பாடு என அனைத்திலும் ஒரு தனித்துவத்தை உணர முடியும். அந்த வரிசையில் ‘சிமிலி உருண்டை’ எனும் ஊட்டச்சத்து மிக்கச் சிற்றுண்டி மிகப் பிரபலம்.

சரித்திரத்தில் புகழ்பெற்றவை ஆற்காடு மாவட்டங்கள். எத்தனை சாம்ராஜ்யங்கள்… பல்வேறு போர்கள்… கலாச்சாரப் பரிமாற்றங்களைக் கடந்து, கம்பீரமாக நிற்கின்றன ஆற்காடு மாவட்டங்கள். இப்போது பல மாவட்டங்களாகப் பிரிந்துவிட்டாலும், உணவியல்ரீதியில் ஆற்காடு மாவட்டங்களுக்குப் பல்வேறு ஒற்றுமைகள் உள்ளன.
அந்தப் பகுதிகளில் கிடைக்கும் பிரியாணி ரகங்கள், இனிப்பு ரகங்கள், உணவுப் பண்பாடு என அனைத்திலும் ஒரு தனித்துவத்தை உணர முடியும். அந்த வரிசையில் ‘சிமிலி உருண்டை’ எனும் ஊட்டச்சத்து மிக்கச் சிற்றுண்டி மிகப் பிரபலம்.
ஆரோக்கிய உருண்டை: கேழ்வரகுதான் சிமிலி உருண்டையின் மையப்பொருள். ஜவ்வாது மலைத் தொகுப்புகளில் சிறுதானிய விவசாயம் அதிகம் என்பதால் முதன்மைப் பொருளாகக் கேழ்வரகு இருந்திருக்கலாம். உடைத்த கடலை, எள், ஏலம் என ஆரோக்கியமான உணவுப் பொருட்களின் மூலம் சிமிலி உருண்டைத் தயாரிக்கப்படுகிறது.
What's Your Reaction?